இதுவே எங்கள் இலக்கு: ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைனின் அறிவிப்பு
ரஷ்ய (Russia) படைகளின் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுக்க, ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவாக்குவதற்காகவே இந்த தாக்குதல் என முதன்முறையாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆம் திகதி திடீரென உக்ரைன் இராணுவம் எல்லையில் ரஷ்ய பகுதியான குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்தது.
தற்காப்பு நடவடிக்கை
அதன் போது, சுமார் 70 குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள இரண்டு பாலங்களை தகர்த்து ரஷ்ய படைகளுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார், "தற்போது ஒட்டுமொத்த தற்காப்பு நடவடிக்கைதான் எங்களது முதன்மையான பணியாகும்.முடிந்தவரை ரஷ்ய போர் திறனை அழித்து அதிகபட்ச எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது.
உக்ரைனுக்கு எல்லையில் பாதுகாப்பு மண்டலம் தேவை. பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு."
பதில் தாக்குதல்
உக்ரைனின் இந்த ஊடுருவலை சற்றும் எதிர்பார்க்காத ரஷ்ய படைகள், தங்கள் பகுதியை தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த பதற்றத்துக்கு மத்தியில், குர்ஸ்க் பிராந்தியத்தில் மேலும் ஒரு பாலத்தை உக்ரைன் தகர்த்ததாக ரஷ்யா அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |