மொட்டு கட்சியின் பேருவளை பிரதேச சபை தலைவரின் கன்னத்தில் அறைந்த சாரதி!
பேருவளை பிரதேச சபையின் தலைவர் சாரதி ஒருவரால் தாக்கப்பட்டதாக அளுத்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேருவளை பிரதேச சபையின் தலைவர் மேனக விமலரத்ன என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருவளை பிரதேச சபையின் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்ற பின்னர், ஒரு ஹோட்டலில் மதிய உணவிற்கு பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிய உணவுக்குப் பிறகு, பிரதேச சபையின் தலைவர் தனது கார் வரும் வரை ஹோட்டலின் முன் காத்திருந்தார்.
அப்போது, குடிபோதையில் வந்த நான்கு சாரதிகளில் ஒருவர் தனது இடது காதில் அடித்து தன்னை தள்ளியதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், கடுமையான வார்த்தைகளால் பேசியதுடன், "கோ பியால் சாந்த" என்று கேட்டு தனது அருகில் வந்த ஒரு சாரதி இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார்.