வெளிநாடொன்றில் பரபரப்பு: தேவாலயமொன்றில் 38 படுகொலை - பலர் கவலைக்கிடம்
World
Democratic Republic of the Congo
By Dilakshan
காங்கோ நாட்டில் உள்ள ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத குழுவினால் இந்தக் கொலைகள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்வத்தில் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் நிழல் குழு
இந்தத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்ட ஏ.டி.எஃப் கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
