தேவாலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல் - பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்
Attack
Kamal Gunaratne
Churches
Ministry of Defense
By Chanakyan
நாட்டிலுள்ள தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்று வெளியான செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்னியல் ஊடகங்களில் மற்றும் சமூக ஊடகங்களில் குறித்த செய்தி வெளியாகியிருந்தது.
இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமல் குணரத்ன (General.Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் வெளியிட்டுள்ள தகவலில்,
குறித்த தகவல் தொடர்பில் எந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.