போதைப்பொருள் கடத்தல் கும்பல் இராணுவத்தினர் மீது திடீர் தாக்குதல்: கொலம்பியாவில் பெரும் பரபரப்பு!
கொலம்பியா இராணுவத்தினர் மீது போதைப்பொருள் கடத்தல் கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொலம்பியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு அதிகளவு போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.
இந்நிலையில், அந்நாட்டின் அண்டிகுவா மாகாணம் இட்வாங்கோ பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்களை குறிவைத்து ஒடோனியலின் கல்ஃப் கிலன் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நேற்று திடீர் தாக்குதலை நடத்தினர்.
அந்நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஒடோனியல் என்பவரை இராணுவத்தினர் கடந்த மாதம் கைது செய்துள்னர். இதனால், போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் அரங்கேறி வருகிறது எனவும் செய்தி வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் கடத்தலை தடுக்க கொலம்பிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.