இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் சகோதரர் மீது கொலைவெறி தாக்குதல்
Cricket
Sri Lanka Cricket
Sri Lanka
By Shalini Balachandran
கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் (Dhananjaya de Silva) சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை, பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்றும் அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொரட்டுவை லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, காயமடைந்த நபரின் நிலைமை மோசமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்