தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் வீட்டின் மீது தாக்குதல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் அருள்ராஜா பிரேமாகரன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, நேற்று (01) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக வீட்டிலிருந்த எவருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையென வெல்லாவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
வேட்பாளரான பிரேமாகரன் சம்பவத்தின் போது அருகிலுள்ள மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் அவரது மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டிருந்த நிலையிலேயேதான் இத்தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
23 மணி நேரம் முன்