அமெரிக்க விமான தளம் மீது திடீர் தாக்குதல்
United States of America
Iran
Iraq
World
By Dilakshan
மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவ வீரர்களின் அல் அசாத் விமான தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தளத்தில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலினால் அமெரிக்க இராணுவ வீரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
ஈரானின் ஆதரவு அமைப்புகள்
தாக்குதல் தொடர்பில், அமெரிக்க இராணுவம் தெரிவிக்கையில், மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆனால் சில ஏவுகணைகள் இராணுவ தளம் மீது விழுந்தது.
ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்