வசந்த முதலிகேவை தொடர்ந்தும் சிறைவைக்க முயற்சி

SL Protest Sri Lanka Anti-Govt Protest
By Vanan Nov 14, 2022 02:37 PM GMT
Report

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை தொடர்ந்தும் சிறைவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று தங்காலை நீதவான் முன்னிலையில் வசந்த முதலிகே முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வசந்த முதலிகே தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு

வசந்த முதலிகேவை தொடர்ந்தும் சிறைவைக்க முயற்சி | Attempt To Keep Vasantha Mudalike In Jail

இதனையடுத்து வசந்த முதலிகே தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை பரீசிலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 10 ஆம் திகதி பணித்திருந்தது.

இந்த நிலையில் சுமார் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வசந்த முதலிகே இன்று தங்காலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மேலும் தெரிவிக்கையில்,

வசந்த முதலிகேவை தொடர்ந்தும் சிறைவைக்க முயற்சி | Attempt To Keep Vasantha Mudalike In Jail

“இன்று வசந்த முதலிகே, பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின் பேரில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். எனினும் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அந்த உத்தரவை பின்பற்றினாலும் இன்றுடன் அவர் 86 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே தடுத்துவைப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. அவர் வேறு வழக்குகளில் தொடர்புபட்டுள்ளதால், எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.

என்ன வழக்கு மற்றும் எந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளார் என்பது தொடர்பில் நாம் கேள்வி எழுப்பிய போது, அவர்கள் அதற்கு பதிலளித்த காவல்துறை அதிகாரிக்கு அது தொடர்பான விடயங்களை முன்வைக்க முடியாமல் போயுள்ளது.

தெளிவாக இது உச்ச நீதிமன்றத்தில் வழங்கிய உத்தரவை மீறி அவரை, மோசடியான முறையில் புறக்கணித்து மீண்டும் சிறையில் அடைப்பதற்கு அவர்கள் திட்டமிட்டுகின்றனர் என்ற விடயத்தை நாம் மன்றுக்கு சுட்டிக்காட்டினோம்.

இன்றைய வழக்கு விசாரணை தொடர்பான நீதிமன்ற அறிக்கையை பெற்றுக்கொண்டுள்ளோம். அதனை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்க்கின்றோம்" - என்றார்.

வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவர்களை விடுவிக்குமாறு அல்லது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி