அரச சொகுசு வாகனங்களுக்கான ஏலம்: விண்ணப்பதாரர்களுக்கு வெளியான அறிவிப்பு
எரிசக்தி அமைச்சகம் தற்போது வைத்திருக்கும் 14 சொகுசு மற்றும் சேவையிலிருந்து நீக்கிய வாகனங்களை விற்பனை செய்வதற்கான பொது விலைமனு கோரலை அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர்ஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, மெர்சிடிஸ் பென்ஸ் இ200 சிஜிஐ போன்ற உயர் ரக எஸ்யூவிகள் மற்றும் பல பயன்பாட்டு வாகனங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெண்டர் அறிவிப்பின்படி, BMW X530D (2016), பல டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ மற்றும் லேண்ட் க்ரூஸர் மாடல்கள், நிசான் பேட்ரோல் Y62 மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் டபுள் கெப் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஏலங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆர்வமுள்ள ஏலதாரர்கள்
வாகனங்கள் 1,295 CC முதல் 5,552 CC வரை எஞ்சின் திறன் கொண்டவை மற்றும் 2000 மற்றும் 2016 இற்கு இடையில் தயாரிக்கப்பட்டவை.
இந்தநிலையில், ஆர்வமுள்ள ஏலதாரர்கள் ஒவ்வொரு வாகனத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் மற்றும் ஏலத்தை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப் படிவங்களை ஜூலை 15, 2025 வரை, வேலை நேரங்களில் கொழும்பு 03, காலி வீதி எண். 437, மூன்றாவது மாடியில் உள்ள அமைச்சின் கணக்குப் பிரிவில் வாகனத்திற்கு ரூபாய் 5,000 திருப்பிச் செலுத்த முடியாத கட்டணமாக செலுத்தி பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
[RC1B1NX ]
விண்ணப்பங்கள்
டெண்டர் விண்ணப்பங்கள் கிடைத்தவுடன், இந்தக் காலகட்டத்தில் வாகனச் சோதனைகள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஏலத்துடனும் வாகனத்திற்கு ரூபாய் 50,000 திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, மூத்த உதவிச் செயலாளரை (நிர்வாகம்) 0112-574740 என்ற எண்ணிலும், போக்குவரத்து அலுவலரை 0112-574941 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுருத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
