சீனாவை நிர்மூலமாக்க அமெரிக்கா வகுத்த திட்டம்!
நாம் வாழ்கின்ற பூமியில் போரியல் சார்ந்த வியூகங்கள் அமைக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தப் பூமிப்பந்தில் எந்த இடத்தில் வாழ்ந்தாலும், அந்த மாற்றம் எங்களின் வாழ்வியலில் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை செலுத்தியது தீரும் - அந்த அளவிற்கு அந்த மாற்றம் மிக மிக முக்கியமானது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்ட AUKUS என்ற ஒப்பந்தத்தின் மூலம் உலக ஒழுங்கில் ஒரு போரியல் வியூகம் அமைக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றார்கள் போரியலாளர்கள்.
உலக ஒழுங்கில் ஒரு மாற்றத்திற்கு வித்துட்டுள்ள ஒரு ஒப்பந்தம் என்றே AUKUS கூறப்படுகின்றது.
அடுத்து வருகின்ற தசாப்தங்களில் இந்த உலகின் போரியல் அரங்குகளில் முக்கிய வகிபாகத்தை வகிக்க இருக்கின்ற ஒரு பெயராக இருக்கப் போகின்ற AUKUS ஒப்பந்தம் பற்றி விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம்,