தமிழின அழிப்புக்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
protest
australia
geneva
By Vasanth
ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தீர்மான வரைபில், தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளை உள்ளடக்குமாறு கோரி இன்று அவுஸ்திரேலியாவின் பெரு நகரங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிட்னி, மெல்பேர்ண், பேர்த், பிரிஸ்பேர்ன், அடெலைட் ஆகிய இடங்கள் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.
சில இடங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தபோதும் மழைக்கு மத்தியிலும் இந்தப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்புத் தொடர்பாக சர்வதேச நீதிக்கான பொறிமுறை ஒன்று அமைக்கபடவேண்டுமெனவும்,
இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் விசேட தூதுவரை நியமித்து அங்கு தொடரும் அடக்குமுறைகளை கண்காணிக்குமாறும் இந்தப்போரட்டங்களில் கோரிக்கை விடுக்கபட்டிருந்தது.