அவுஸ்திரேலியாவில் கத்திகுத்து: சிறுவனை சுட்டு வீழ்த்திய காவல்துறையினர்
அவுஸ்திரேலியாவின்(Australia) பெர்த்தின்(Perth) புறநகர் பகுதியான வில்லெட்டனில்(Willetton) 16 வயது சிறுவன் ஒருவன் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதை அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த அந்த சிறுவன் கத்தியுடன் காவல்துறையினரை நோக்கி வந்த நிலையில் அந்த சிறுவனை கத்தியைக் கீழே போடுமாறும் மற்றும் சரணடையுமாறும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
ஆனால் அதற்கு மறுத்த சிறுவன் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயன்றதால் அவன் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |