இலங்கை தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அவுஸ்திரேலியா
மகளுக்கு அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி கிடைத்துள்ள செய்தியறிந்து அங்குள்ள இலங்கை தமிழ் குடும்பம் பெருமகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
2012 இல் நிவே என்பவர் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போது, இந்தக் குடும்பம் (நீலவண்ணன் பரமானந்தன் ) இலங்கையில் இருந்து படகில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றது.
உயிருக்கு பயந்து அக்குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் நிவே அவுஸ்திரேலியாவில் பிறந்தார்.
அவுஸ்திரேலிய குடியுரிமை
அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெறும் தகுதியை அடைந்துள்ளார்.
அவரது குடியுரிமைக்காக பெற்றோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில் கடிதம் கிடைத்துள்ளது.
இதனால், மொத்தக் குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
பெற்றோர்கள் அவுஸ்திரேலிய குடிமக்களாக அல்லது பெற்றோர்களில் தாய் தந்தை யாரேனும் ஒருவர் அல்லது இருவருமே அவுஸ்திரேலியாவின் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்தால் மட்டுமே அவுஸ்திரேலியாவில் பிறக்கும் குழந்தைகள் குடியுரிமை பெறமுடியும்.
புதிய நம்பிக்கை
[புதிய நம்பிக்கை]
நீலவண்ணன் குடும்பத்தினர் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக விசா அந்தஸ்து ஏதுமின்றி பல்லாரத்தில் வசித்து வரும் நிலையில், இப்போது நிவே குடியுரிமை பெற தகுதி பெற்றிருப்பது அவர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
"இது எங்களுக்கு மிகவும் நல்ல செய்தி. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உணர்ந்தோம், ஆனால் விரைவில் எங்களுக்கும் மற்ற இரண்டு மகள்களுக்கும் இது நடக்க வேண்டும் என்று விரும்புகிறோம்" என்று அவரது தந்தையான நீலவண்ணன் கூறியுள்ளார்.