அவுஸ்திரேலியாவில் நடைபயணம் மேற்கொண்ட இலங்கையருக்கு அடித்தது அதிஷ்டம்
அவுஸ்திரேலியாவில் தான் உட்பட குடியுரிமை அற்று இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி இலங்கையர் ஒருவர் மேற்கொண்ட நடை பயணத்திற்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
இதன்படி அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் குடியுரிமை வழங்க உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
அவுஸ்திரேலியாவில் விசா இன்றி
இதனால் கடந்த 09 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் விசா இன்றி இருந்த நீல் பரா அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
கடந்த ஓகஸ்ட் முதலாம் திகதி குடியுரிமை அற்றவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி விக்டோரியா மாகாணத்தில் இருந்து 1000 கிலோமீட்டர் நடைபயணத்தை நீல் பரா ஆரம்பித்திருந்தார். அவர் நடைபயணத்தின் இறுதியில், சிட்னி பிரதமர் அலுவலகத்தில் அவுஸ்திரேலிய பிரதமரைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
நடைபயணம் நிறைவடைவதற்கு முன்னரே
எனினும் அவரது நடைபயணம் நிறைவடைவதற்கு முன்னரே அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டதாக குறித்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.