சீறிப்பாயும் காளைகள் : உற்சாகமாக தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
Thai Pongal
India
By Raghav
மதுரையில் (Madurai) பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவனியாபுரம் (Avaniyapuram) ஜல்லிக்கட்டு இன்று (ஜனவரி 14) காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கோலாகலமாகத் தொடங்கியது.
பாரம்பரிய முறையில் உறுதிமொழியுடன் காளைகளை அடக்கும் போட்டியான ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியது.
முன்னதாக, பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், காளைகள் நடமாடுவதற்கான தடுப்புகள், பார்வையாளர் அரங்குகள் உள்ளிட்டவற்றை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆண்டு போட்டியில் 1,110 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு உற்சாகமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரலையை கீழ் உள்ள இணைப்பில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்