பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள்

India Hinduism Hyderabad ISRO
By Shadhu Shanker Jan 21, 2024 02:05 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இந்தியா
Report

விண்வெளியில் இருந்து செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட அயோத்தி ராமர் கோவிலின் புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ(ISRO)வெளியிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை(22) இடம்பெறவுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஐதராபாத்தை தளமாகக் கொண்ட இஸ்ரோவின் National Remote Sensing Centre (NRSC) இந்த படங்களை வெளியிட்டுள்ளது.

சிறீதரன் முதலில் கிளிநொச்சியை விட்டு வெளியே வரவேண்டும்: ஐபிசி தமிழின் ஒரு திறந்த மடல்!

சிறீதரன் முதலில் கிளிநொச்சியை விட்டு வெளியே வரவேண்டும்: ஐபிசி தமிழின் ஒரு திறந்த மடல்!

இஸ்ரோவிடமிருந்து தொழில்நுட்ப உதவி

இந்த படங்களில், 2.7 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ராம ஜென்மபூமி தளமும் கோயிலைத் தவிர, சரயு நதி, தஷ்ரத் மஹால் மற்றும் அயோத்தி தொடருந்து நிலையம் ஆகியவை படங்களில் தெளிவாகத் தெரிகின்றன.

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள் | Ayodhya Ram Mandir Image From Space Isro Viral Ind

இந்த படங்கள் 2023 டிசம்பர்16 ஆம் திகதி எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ராமர் கோவில் கட்டும் பணியில் இஸ்ரோவிடமிருந்து தொழில்நுட்ப உதவியும் எடுக்கப்பட்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தின் ஒரு மோசமான தலைமை விடைபெறுகின்றது இன்று....

தமிழ் இனத்தின் ஒரு மோசமான தலைமை விடைபெறுகின்றது இன்று....

அயோத்தி ராமர் கோவில்

ராமர் கோவில் கட்டும் போது ராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ராமர் சிலை வைப்பது மிகப்பாரிய சவாலாக இருந்ததுள்ள நிலையில் இதற்கு இஸ்ரோ உதவி அளித்துள்ளது.

பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் அயோத்தி ராமர் கோவில்: இஸ்ரோ வெளியிட்டுள்ள படங்கள் | Ayodhya Ram Mandir Image From Space Isro Viral Ind

ராமர் கோயிலைக் கட்டும் கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோவின் (Larsen & Toubro) ஒப்பந்ததாரர்கள் உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்பை (GPS) பயன்படுத்தினர். சுமார் 1-3 செமீ வரையிலான துல்லியமான ஒருங்கிணைப்புகள் தயாரிக்கப்பட்டன.

இது கோயிலின் கருவறை மற்றும் சிலை நிறுவப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த புவியியல் கருவியில் பயன்படுத்தப்படும் உபகரணங்களில், இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட Navigation with Indian Constellation (NavIC) செயற்கைக்கோளில் இருந்து location signals அடங்கும்.

பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் மற்றும் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்கள் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறீதரனுக்கே வாக்களித்தேன்: யோகேஸ்வரன் பகிரங்கம்

சிறீதரனுக்கே வாக்களித்தேன்: யோகேஸ்வரன் பகிரங்கம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023