அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தால் அதிகரிக்கப்படும் வேலைவாய்ப்புகள்
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு 20,000 வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 22 ஆம் திகதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில் அங்கு விருந்தோம்பல், பயணம் மற்றும் சுற்றுலாத் தொழில்கள் இணைந்து 20,000 வேலைகளை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தலமாக மாறும் அயோத்தி
எதிர்வரும் மாதங்களில், தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால், வேலை வாய்ப்புகள் சீராக உயரும் என்று தொழில்துறையினர் கணித்துள்ளனர்.
ராமர் கோயில் அயோத்தியை ஒரு முக்கிய உலக சுற்றுலா தலமாக மாற்றும் என்று இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி யேஷாப் கிரி தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு 3-4 லட்சம் பார்வையாளர்கள் அயோத்திக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வேலை வாய்ப்புகள்
சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பின் விளைவாக தங்குமிடம் மற்றும் பயண சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
அயோத்தியைத் தவிர, லக்னோ, கான்பூர் மற்றும் கோரக்பூர் போன்ற அருகிலுள்ள நகரங்களில் தேவை காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |