வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்த இருவரின் சிலிர்க்க வைக்கும் கணிப்புகள்
உலக அளவில் பேசு பொருளாகிய வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்த இரண்டு ஜோதிடக்கலை நிபுணர்களின் 2025ஆம் ஆண்டைக்குறித்த கணிப்புகள் பலித்த விடயம் அனைவரையும் பாரிய ஆச்சியத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவ்வாறு ஆச்சரியப்படுத்தியவர்களில் முதலாவதாக 1911 ஆம் ஆண்டு பிறந்த பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பல்கேரிய நாட்டவரான பாபா வங்கா திகழ்கிறார்.
அடுத்ததாக வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் 1986 ஆம் ஆண்டு பிறந்த பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé) காணப்படுகின்றார்.
பலித்த கணிப்புகள்
எனினும், இப்படி வெவ்வேறு காலகட்டத்தில் பிறந்த இந்த இருவரும் 2025ஆம் ஆண்டில் நிகழவிருக்கும் விடயங்கள் குறித்து முன்பே கணித்துள்ளார்கள்.
அவர்களுடைய கணிப்புகள் பல பலித்தும் வருவதால், அதுவும் மூன்றாம் உலகப்போர் அச்சம் அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் பெருமளவில் கவனம் ஈர்த்துவருகிறார்கள்.
2025ஆம் ஆண்டில், பெரிய இயற்கைச் சேதங்கள் ஏற்படும் என பாபா வங்கா கணித்துள்ளார். அதேபோல, சமீபத்தில் தாய்லாந்து மற்றும் மியான்மரைத் தாக்கிய நிலநடுக்கம் ஒன்று சுமார் 2,000 உயிர்களை பலிவாங்கியது.
அத்துடன், Tonga நாட்டிலும் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகிய நிலநடுக்கம் உருவானதுடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
ஏதோஸின் எச்சரி்க்கை
அதேநேரம், சீனக்கடலில் ஒரு டிஜிட்டல் இடையூறு ஏற்படும் எனவாழும் நாஸ்ட்ரடாமஸ் ஏதோஸ் எச்சரித்திருந்தார்.
அப்போது அதை எல்லோரும் வேடிக்கையாக கருதினார்கள். ஆனால், இப்போது எல்லோரும் அவர் சொன்னதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
ஆம், ஏதோஸ் சொன்னதுபோலவே, கடலுக்கு அடியில் 4,000 அடி ஆழத்தில் செல்லும் இன்டர்நெட் கேபிள்களை துண்டிக்கும் கருவி ஒன்றை சீனா வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
அப்படி கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் துண்டிக்கப்படுமானால், பல நாடுகளில் தொலைதொடர்பு உட்பட பல முக்கிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும்.
கலிபோர்னிய காட்டுத்தீ
அதேபோல, குறிப்பாக, கலிபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்படும் என எச்சரித்திருந்தார் ஏதோஸ். அதுவும் அப்படியே பலித்துள்ளது.
ஆக, வெவ்வேறு காலகட்டத்தைச் சேற்ந்த இரண்டு ஜோதிடக்கலை நிபுணர்கள், 2025ஆம் ஆண்டைக் குறித்து கணித்த விடயங்கள் பலித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
