மியன்மார் - தாய்லாந்து நிலநடுக்கங்கள் : அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்பில் மியான்மர் நிலநடுக்கமும் இருந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல்கேரியாவைச் (Bulgaria) சேர்ந்த பாபா வங்கா தனது வாழ்நாளில் கணித்த பல விடயங்கள் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 9/11 அமெரிக்க தாக்குதல், செர்னோபில் பேரழிவு ஆகியவை அடங்குகின்ற நிலையில் அதேபோல் 2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்தும் கணிப்புக்கள் உள்ளடங்கியுள்ளது.
முழுவதுமே பேரழிவு
அவற்றில் ஒன்று தற்போது நிகழ்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சி அளித்துள்ளது.

இதன்படி, தாய்லாந்து மற்றும் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களும் குறித்த கணிப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவதுமே பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்களும் மற்றும் இயற்கை சீற்றங்களும் உண்டாகும் என பாபா வங்கா கணித்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தில் பேரழிவு
அதேபோல், அமெரிக்க மேற்கில் நிலநடுக்கங்கள் மனித சமுதாயத்தில் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, அவரது கணிப்புகளில், ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உலகின் பல்வேறு அம்சங்களில் முக்கியமான பொறுப்புகளை வகிப்பார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, உக்ரைன் போரில் அவர் முன்னிலை வகிப்பார் என்றும், ஐரோப்பிய நாடுகள் பின்தங்கும் என்றும் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல் ஏற்படக்கூடும் என்றும், உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்படும் என்றும் அவர் கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்