மாற்றமடையும் ஐரோப்பாவின் அரசியல் : கணித்தது யார் தெரியுமா?
எதிர்கால கணிப்புகள் குறித்து நாம் பேசும்போது பாபா வங்காவின் பெயர் நிச்சயம் வரும். பார்வையற்றவராக இருந்தபோதிலும், எதிர்காலம் குறித்த அவரது கணிப்புகளால் உலகப் புகழ் பெற்றார்.
அவரது சில கணிப்புகள் சமூக ஊடகங்களில் மீண்டும் வைரலாகி வருகின்றன. பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா, தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர், சோவியத் யூனியனின் வீழ்ச்சி, ஸ்டாலினின் மரணம், செர்னோபில் பேரழிவு, 9/11 தாக்குதல் போன்ற பல நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்ததாக பலர் நம்புகின்றனர்.
பாபா வங்காவின் ஐரோப்பிய அரசியல் கணிப்பு
மேலும், 2004 சுனாமி, 1985ல் வடக்கு பல்கேரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையும் அவர் கணித்ததாகக் கூறப்படுகிறது இந்நிலையில், பாபா வங்கா கணித்த ஒரு செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது 2024ம் ஆண்டு ஐரோப்பாவில் முஸ்லிம் ஆட்சி அமையும் என்றும், 44 நாடுகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்றும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
மேலும், 2076ல் உலகம் முழுவதும் கம்யூனிச ஆட்சி மீண்டும் வரும் என்றும், 5079ல் ஒரு இயற்கைச் சீற்றத்தால் பூமி முற்றிலும் அழிந்துவிடும் என்றும் அவர் கணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025ல் பெரும் சுனாமி ஏற்படும்
இவை தவிர, ஜப்பானைச் சேர்ந்த ரியோ டாட்சுகி என்பவர் 2025ல் ஒரு பெரிய சுனாமி ஏற்படும் என்று கணித்துள்ளார்.
ஜூலையில் வரும் இந்த சுனாமி ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தைவான் போன்ற நாடுகளை கடுமையாகப் பாதிக்கும் என்றும், இது 2011 ஜப்பான் சுனாமியை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்களை ஈர்க்க்கும் கணிப்புகள்
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி உலகில் நடக்க இருப்பதை விசித்திரமான முறையில் முன்கூட்டியே கணித்து வருகிறார்.
மங்கு கலை ஓவியரான ரையோ தத்சுகி, தான் கனவுகளின் காணும் சம்பவங்களை ஓவியமாக வரைந்து வருகிறார்.
1980 முதல் அவர் கனவுகளை வரையத் தொடங்கிய நிலையில், அவை அனைத்தும் நடந்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
இதுபோன்ற கணிப்புகள் உண்மையாகுமா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லும். இருப்பினும், எதிர்கால கணிப்புகள் மீதான மக்களின் ஆர்வமும் நம்பிக்கையும் குறைந்தபாடில்லை. நோஸ்ட்ராடாமஸ், பாபா வங்கா போன்றவர்களின் கணிப்புகள் இன்றும் பலரை ஈர்த்து வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
