சுட்டு வீழ்த்தப்பட்ட ரபேல் விமானம் - மறைத்து நாடகமாடிய இந்தியா : அம்பலமான பகீர் தகவல்
ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) இராணுவ நடவடிக்கையின் போது இந்தியாவின் (India) ஐந்து விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீரின் (Jammu & Kashmir) பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக கடந்த 07ஆம் திகதி இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டது.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் இரு நாடுகளும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கடந்த கடந்த புதன்கிழமை இந்தியாவின் ஐந்து விமானங்கள் பாகிஸ்தான் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளரும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார்.
ரபேல் விமானங்கள்
ஆனால் இந்தக் கூற்றை இந்தியா முழுவதுமாக நிராகரித்த நிலையில் இந்திய தரப்பிலிருந்து எந்த ஒரு தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆனால் நேற்றைய தினம் (11) பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக, இந்திய ராணுவத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தியிடம் இந்தியாவின் ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஏ.கே.பார்தி ,“நாம் தற்போது போர்ச் சூழலில் இருக்கிறோம். இழப்புகள் என்பது போர்ச்சூழலில் பொதுவானது.
இந்த சூழலில் நாம் நமது நோக்கங்களை அடைந்தோமா என்ற கேள்வியை நீங்கள் கேட்டால், அதற்கான பதில் 'ஆம்' பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கத்தை நிறைவேற்றினோமா என்று கேட்டால் மீண்டும் இதற்கு வலிமையான பதில் 'ஆம்'.'' என்றார்.
மேலும் நாம் இன்னமும் போர்ச்சூழலில் தான் இருக்கிறோம். இப்போது நான் கருத்து தெரிவித்தால், அது நன்மை பயப்பதாக இருக்காது. எனவே எதிரிகளுக்கு இந்த நிலையில் எந்த சாதகமான நிலையையும் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை'' என்றார்.
''என்னால் சொல்ல முடிவது இதுதான்,'நாம் நமது நோக்கங்களை அடைந்து விட்டோம்'. மேலும் 'நம்முடைய அனைத்து விமானிகளும் பாதுகாப்பாக வீடு திரும்பினர்'' என்று கூறினார்.
இந்த பதிலின் மூலம் இந்தியாவின் ரபேல் விமானம் பாகிஸ்தான் இரணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளமை தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.
இதன்படி உலகிலேயே ரபேல் ரக விமானங்களை சுட்டு வீழ்த்திய முதல் நாடாக பாகிஸ்தான் தன்னை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
