இந்தியாவிற்கு ஏற்படவுள்ள பேரிடி..! பரபரப்பான பாபா வாங்காவின் கணிப்பு
பலர் எதிர்காலத்தில் நடக்கப்போவதை கூறுவதாக தெரிவிக்கும் பட்சத்தில் கடந்த நூற்றாண்டு வாழ்ந்த பெண்மணியின் எதிர்கால கருத்து தற்போது உலகையே புரட்டிப்போட்டுள்ளது.
அவரது பெயர் அடிக்கடி ஊடகங்களில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் தான் பாபா வாங்கா, யார் இந்த பாபா வாங்கா? என்ற கேள்வி எம்முள் இருக்கலாம்.
அமெரிக்காவை ஒரு கறுப்பினத்தவர் ஆட்சி செய்வார். சுனாமி ஏற்படும். யுத்தம் ஒன்று உருவாகும் என்று அவர் கணித்த பலவிடயங்கள் நிஜமாகியுள்ளதை நாம் அறிவோம்.
இப்போது பாபா வாங்கா என்பது யார் என்று பாப்போம். இவர் 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி பிறந்தார்.
இவர் ஒரு குறைமாத குழந்தை என்று கூறப்படுகிறது. பல்கெரியாவில் வாழ்ந்து வந்த இவர் 1996 ஆம் ஆண்டு ஓகஸ்டில் மறைந்தார்.
சக்தி கிடைத்தவிதம்
இவரது 12 வயதிலே பல்கெரியாவில் ஏற்பட்ட புயலில் சிக்கிக் கொண்டதாகவும் பின்னர் இவரது பார்வை இழந்தாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பின்னர் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி தனக்கு கிடைத்ததாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
சில அரசியல் வாதிகளால் இவர் சில கணிப்புக்கு நிர்ப்பந்திக்கப்பட்டார் எனவும் இவரது வீடு வேவுபார்க்கப்பட்டதாகவும் சிலர் கருதுகின்றனர்.
இவரது புகழ் பெற்ற கணிப்புக்கள் பலவுள்ளன. தந்து 50 வயது பணியில் நூற்றுக்கணக்கில் ஆருடங்களை தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான கணிப்புகள்
இவரது கணிப்புக்களில் 2 ஆம் உலகப்போர் தொடக்கம் மற்றும் அதன் விளைவுகள், 3 ஆம் போரிஸ் மரணத்திகதி, சைப்பிரஸ் முரண்பாடு, இந்திராகாந்தி தேர்தல் வெற்றி மற்றும் மரணம், சோவியத்தின் வீழ்ச்சி என்பன சுட்டிக்காட்டத்தக்கவையாகும்.
அதேவேளை வெட்டுக்கிளிகள் 2022 ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கக்கூடும் என்ற கணிப்பும் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாபா வாங்காவின் கணிப்பில் வேற்றுக்கிரக வாசிகள் இந்தியா வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்தளவிற்கு உண்மை என்பதை எதிர்காலத்தில் நாம் அறிந்து கொள்ளமுடியும்.
