மன்னர் சார்லஸின் முடிவு இது தான்..! துல்லியமாக கணித்த பாபா வங்கா
பிரித்தானிய மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவரது ஆட்சி தொடர்பில் பாபா வங்கா முன்னர் கணித்துள்ள விடயமொன்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மன்னர் சார்லஸ்க்கு புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மன்னர் சார்லஸ் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால் அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது என பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பாபா வங்கா கணித்துள்ள விடயம் தற்போது வைரலாகியுள்ளது.
உயிருடன் இருந்தால் மட்டுமே
ரஷ்யரான பாபா வங்காவின் கணிப்பு ஒன்று நடந்தேறினால் பிரித்தானிய மன்னர் சார்லஸின் ஆட்சிக்கு முடிவே இல்லை என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சார்லஸ் மன்னர் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால் மட்டுமே, பாபா வங்கா கணித்துள்ளபடி அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது என கூறப்படுகிறது.
பாபா வங்கா இதுவரை கணித்துள்ளவற்றில் தோராயமாக 85% நிறைவேறியுள்ளதாகவே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அவரது கணிப்புகளில் ஒன்று, 2046 க்கு பின்னர் மனித குலம் 100 வயதைக் கடந்து வாழும் என குறிப்பிட்டுள்ளார். அறிவியலின் வளர்ச்சி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளால் இது சாத்தியமாகும் எனவும் பாபா வங்கா தெரிவித்துள்ளார்.
சார்லஸ்க்கு புற்றுநோய்
இதன் அடிப்படையில், தற்போது மன்னர் சார்லஸின் வயது 75, இன்னும் 22 ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தால், அதாவது 97 வயது வரையில் அவர் ஆட்சியில் இருந்தால் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளபடி கணிப்பு நிஜமாகும் என்கிறார்கள்.
இந்தநிலையில், தற்போது மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |