துல்லியமாக நிகழ்ந்தேறும் பாபா வாங்காவின் கணிப்புகள்....என்னவென்று தெரியுமா!
பாபா வாங்கா கணித்த துல்லியமான எதிர்கால கணிப்புகளில் அடுக்கப்பட்டுள்ள அழிவுகளுக்கு மத்தியில், நல்ல விடயங்களையும் எதிர்வுகூறியிருப்பது தெரியவந்துள்ளது.
இயற்கைச் சீற்றங்கள், பேரழிவுகள், போர், கொள்ளை நோய், பிரபலங்களின் மரணம் போன்ற மோசமான விடயங்களை கணித்த பல்கேரியா நாட்டவரான கண்பார்வையை இழந்த பாபா வங்கா எதிர்காலம் தொடர்பில் சில நல்ல விடயங்களையும் கணித்துள்ளார்.
அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல், பிரெக்சிட் போன்ற விடயங்களைத் துல்லியமாக கணித்த பாபா, உலகம் இந்த ஆண்டில் (2024) மிகப்பெரிய மருத்துவ மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளைச் செய்யும் எனவும் கணித்துள்ளார்.
தடுப்பு மருந்து
அந்த வாக்குகள் மெய்யாகும் வகையில், பாபா கூறியதைப்போலவே, அறிவியலாளர்கள் சிலர், நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து ஒன்றைத் தயாரித்துவருவது குறித்த செய்திகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி, ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், Francis Crick நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அறிவியலாளர்கள் சிலர் இணைந்து, நுரையீரல் புற்றுநோய்க்கெதிரான லங்வக்ஸ் (LungVax) என்னும் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
ரஷ்ய அறிவியலாளர்கள்
அத்துடன், ரஷ்ய அறிவியலாளர்களும் இதேபோன்றதொரு ஆய்வு மேற்கொண்டுவருவதை, ரஷ்ய அதிபர் புடினே கூறியுள்ளார்.
ஆக மொத்தத்தில் பாபாவின் நல்ல கணிப்புகளில் ஒன்று துல்லியமாக நிறைவேறியுள்ளதாக அனைவர் மத்தியிலும் பரவலாக பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |