2024 எப்படி இருக்கும்! அச்சத்தை ஏற்படுத்தும் பாபா வாங்காவின் கணிப்பு
Donald Trump
Vladimir Putin
Baba Vanga
Israel-Hamas War
By Vanan
பாபா வாங்கா 2024 ஆம் ஆண்டில், ஏழு தீர்க்கதரிசனங்களை கூறியுள்ள நிலையில், அது குறித்த அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது.
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, இங்கிலாந்து இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் போன்றவை நிஜமாகியுள்ளன.
ஏழு தீர்க்கதரிசனங்கள்
இந்நிலையில், அவர் கூறிய ஏழு தீர்க்கதரிசனங்கள் வருமாறு,
- 2024ல் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல இயற்கை பேரழிவுகள் ஏற்படும். புற்றுநோய்க்கான தீர்வு கண்டுபிடிக்கப்படும்.
- குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும்.
- ரஷிய அதிபர் புடின் தனது சொந்த நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார்.
- ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும். மேலும் ஒரு "பெரிய நாடு" அடுத்த ஆண்டு அணு ஆயுத சோதனைகள், தாக்குதல்களை நடத்தும்.
- பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
- அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், மர்ம நோயால் பாதிக்கப்படுவார்.
- சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும். ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாகி, மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைப்பார்கள் எனக் கணித்து எச்சரித்துள்ளார்.
பல்கேரிய நாட்டைச் சேர்ந்தவர் பாபா வங்கா. 1911இல் வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார்.
சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அதில் அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. 1996ல் மரணமடைந்தாலும் அவரது கணிப்புகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.
முதலாம் ஆண்டு திவச அழைப்பிதழ்