பரம்பரை அரசியல் சூழலை மாற்றியமைக்க வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க

Champika Ranawaka Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka
By Vanan Nov 05, 2023 10:54 PM GMT
Report

பரம்பரையாக செய்யும் அரசியலை மாற்றி திறமைக்கு முதலிடம் அளிக்கும் அரசியல் சூழலை உருவாக்க வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணிக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இன்று (5) சம்மாந்துறையில் இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், எமது நாட்டை இக்கட்டான நிலையிலிருந்து மீட்பதற்கு சரியான தலைமை வேண்டும்.

அரசாங்கத்தின் தவறு

கடந்த வருடம் எங்களுக்கு பெற்றோல், உரம், மின்சாரம், கேஸ் என்று எதுமே இருக்கவில்லை. இதற்கு பிரதான காரணம் எங்களிடம் டொலர் இல்லையென்று கூறப்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு ரணில் பாராட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிக்கு ரணில் பாராட்டு

பரம்பரை அரசியல் சூழலை மாற்றியமைக்க வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க | Need To Change The Traditional Political

வங்கியில் நாங்கள் ஒரு கடனைப் பெற வேண்டுமென்றால் அதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். வங்கியில் பெற்ற கடன் மூலமாக வியாபாரத்தை சரியாக செய்யாது விட்டால் கடனை மீளச் செலுத்துவது கடினமாக இருக்கும்.

அப்போது வங்கி நம்மை வங்குரோத்து அடைந்தவர் என்று கண்டு கொள்ளும். இந்நிலையில் கடனுக்காக எமது சொத்தை வங்கியில் வைத்திருந்தால் அதனை வங்கி எடுத்துக் கொள்ளும்.

இது போலவே கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன்களைப் பெற்று வீதிகள், விமான நிலையங்கள் போன்றவற்றை அமைத்தோம். அவற்றால் எமக்கு எந்த இலாபமுமில்லை. அதனால் கடனை அடைக்க முடியாது போனது.

அடுத்த அதிபர் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட தீர்மானம்

அடுத்த அதிபர் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட தீர்மானம்

நாடு வங்குரோத்தடைந்தது. எங்களுக்கு கடனாக டொலர்களை தந்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். இந்நிலையில் உலக வங்கி கடன்களை தந்தவர்களிடம் நீங்கள் அவசரப்பட வேண்டாம், கடனை தருவதற்குரிய ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். அதனால் வழக்குத் தொடர வேண்டாமென்று வேண்டியுள்ளது.

இப்போது அரசாங்கம் மின்சாரத்தின் விலையையும், பால் மாவின் விலையையும், எரிவாயு, எரிபொருட்களின் விலையையும், ஏனைய பொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது. இதைத்தான் அரசாங்கம் செய்கின்றதே ஒழியே உற்பத்தியை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை.

ஒரு சில தொழில்களை வழங்கினாலும், கடந்த 03 வருடங்களாக இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கவில்லை. தொழில் வழங்கினால் சம்பளம் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் கிடையாது.

வைத்தியர்கள், பொறியிலாளர்கள், கல்விமான்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் எங்களினால் சிறந்த சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மீள வேண்டிய கட்டாயம்

ஆயினும், இங்கு வந்து வாக்குறுதிகளை தருவார்கள். அவற்றை நிறைவேற்ற பணம் யாரிடமும் கிடையாது. இதிலிருந்து மீள வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பரம்பரை அரசியல் சூழலை மாற்றியமைக்க வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க | Need To Change The Traditional Political

சுமந்திரனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட நிலை : மாவை தெரிவித்த தகவல்

சுமந்திரனால் சம்பந்தனுக்கு ஏற்பட்ட நிலை : மாவை தெரிவித்த தகவல்

அதனால் படித்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து 2025 முதல் 2028 ஆண்டு வரையான காலப் பகுதியில் இந்த நாட்டை பழைய நிலைக்கு கொண்டு வரலாமென்ற திட்டத்தை முன் வைத்துள்ளோம்.

இதற்கு முதல் எங்கள் கடனை அடைக்கும் பணம் இக்காலப் பகுதியில் எம்மிடமில்லை. அதனால் 2028 இலக்காகக் கொண்டு செயற்படுகிறோம். இந்த குறுகிய 03 வருட காலத்தில் எங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வழியை ஏற்படுத்த வேண்டியுள்ளது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025