திடீர் மூச்சுத் திணறலால் உயிரிழந்த ஒன்றரை வயதுக் குழந்தை!
Death
Jaffna
Baby
suffocation
By Mkkamshan
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக சேர்க்கப்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அருள்டயஸ் கிவின்சலா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குழந்தைக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. எனினும் சிகிச்சை பயனின்றி இரவு 9 மணிக்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.
குழந்தையின் மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி