பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் : சிஐடி அறிவிப்பு
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இன்று (09) குறித்த விடயத்தினை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் குறித்த சந்தேக நபரின் ஐந்து வங்கிக் கணக்குகளும் அடங்கும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தடுப்பு காவல்
குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பின்னர் சந்தேக நபரான பெக்கோ சமனின் மனைவியை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமை
இதேவேளை, இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து காவல்துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
