சீரற்ற காலநிலை : நயினாதீவுக்கான படகு சேவைகள் நிறுத்தம்
நயினாதீவு - குறிகட்டுவான் இடையான தனியார் படகுச் சேவை இன்றையதினம் (08) இடைநிறுத்தப்படும் என நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சீரற்ற காலநிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தலுக்கமைய குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு பயணிகளைச் செயற்படுமாறு அந்த சங்கத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம்
இதேவேளை கடல் மற்றும் கடற்றொழிலாளர் சமூகத்தினர், இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை தீவின் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஒதுங்கிய கடல்பரப்புகளுக்கு செல்லவேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு என்பன எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால் யாழ்ப்பாணத்தின் தீவகத்திற்கான படகு போக்குவரத்து சேவைகள் பெரும்பாலும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |