யாழில் வீட்டின் மீது முறிந்து விழுந்த பனைமரம்
யாழ்ப்பாணம் (jaffna)- கொக்குவிலில் உள்ள வீடொன்றின் மீது அதிக காற்று காரணமாக பனைமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் நல்லூர் (nallur) பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் மேற்கு பகுதியில் நேற்று (22.5.2024) இடம்பெற்றுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ பிரிவு
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
இந்நிலையில், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் - நெடுந்தீவு கடற்போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 5 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்