இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: வெளியான அவசர இலக்கம்

Sri Lankan Peoples Climate Change TN Weather Weather Cyclone
By Thulsi May 25, 2024 06:04 AM GMT
Report

நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்து விழும் ஆபத்து இருக்குமானால் அது தொடர்பில் 117 என்ற துரித இலக்கத்துக்கு அறிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Bandara Tennakoon) இதனை தெரிவித்துள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்றைய தினம் (24.05.2024) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மக்களே அவதானம்.....! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

மக்களே அவதானம்.....! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள்

அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற காலநிலை தொடர்பாக வளிமண்டல திணைக்களத்தின் அறிவித்தல்களின் பிரகாரம் செயற்படுவது அனைவரதும் கடமை.   

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: வெளியான அவசர இலக்கம் | Bad Weather Wind Warnings To Sri Lankans

அதனால் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்பு பெற வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவித்தல்களுக்கு கவனம் செலுத்துமாறு நாங்கள் நாட்டு மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் மரங்கள் முறிந்து விழும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

மரங்கள் விழுவது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதற்கென ஒரு நிறுவனம் எமது நாட்டில் செயற்படுவதில்லை. இவ்வாறான எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பை கட்டட ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நாங்கள் வழங்கி இருக்கிறோம். அந்த துறையை முன்னேற்ற வேண்டும்.

இலங்கையின் சீரற்ற காலநிலை: 6 பேர் பலி

இலங்கையின் சீரற்ற காலநிலை: 6 பேர் பலி


திடீர் வெள்ளப்பெருக்கு

அதேநேரம் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, உள்ளூராட்சி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் கட்டுமானங்களை அமைப்பதற்கு அனுமதிப்பதாகும்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: வெளியான அவசர இலக்கம் | Bad Weather Wind Warnings To Sri Lankans

சட்டவிரோத கட்டடங்களை நிறுத்துவதற்கு அனுமதியளிப்பதில் ஏற்பட்டிருக்கும் தாமதிப்பை மறைக்க வேண்டாம் என அந்த நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களாக இரத்தினபுரி, மாத்தறை, காலி, கொழும்பு, கழுத்துறை, கம்பஹா, அக்குரணை போன்ற பிரதேசங்கள் இனம் காணப்பட்டிருக்கின்றன.

இதற்கு நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து நிவாரணம், நஷ்டயீடு என செய்துகொண்டிருக்க முடியாது. எனவே நாட்டில் எப்பிரதேசத்திலும் அனர்த்த நிலைமை அல்லது மரம் முறிந்துவிழும் ஆபத்து இருக்குமானால் அதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும்.

அதேபோன்று கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளரை அறிவுறுத்த முடியும் என  அனர்த்த முகாமைத்துவ மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தீவிரமடைந்துள்ள மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடைந்துள்ள மழை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025