இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்
பதுளையில் இரு வேறுப்பட்ட குழுக்களுக்கிடையில் நடந்த மோதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவமானது பதுளை, எகொடபிட்டிய, பத்தனேகெதர பகுதியில் இன்று(01)அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்பகஹாவத்தை, கல்கொடுவேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

இதேவேளை உயிரிழந்தவரின் சகோதரரும் அவரது மனைவியும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் இருவரும்
பிரதேசத்தை விட்டு ச் சென்றுள்ளதாவும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 18 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்