அப்புத்தளை நகருக்குப் புதிய மேயர்: பிரதமர் முன்னிலையில் பதவியேற்பு
sri lanka
mahinda
sri lanka podujana peramuna
By Vasanth
அப்புத்தளை நகரின் புதிய மேயர் உபுல் திசாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து இன்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் மேயர் சம்பத் லமாஹேவா அவர்களின் பதவி விலகலை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில் உபுல் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு நகர சபை உறுப்பினராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த உபுல் திசாநாயக்க, இதற்கு முன்னரும் அப்புத்தளை மேயராக பதவி வகித்துள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆராச்சி, பிரதமரின் செயலாளர் திரு.காமினி செனரத் உள்ளிட்ட பிரதேச அரசியல்வாதிகள் சிலரும் கலந்து கொண்டனர்.





மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி