காற்சட்டைக்குள் போதைப்பொருள் கடத்தல் முயற்சி:பதுளை சிறையில் பெண் கைது
Badulla
Prison
Drugs
Arrest
By Sindu
பதுளை சிறையில் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றத்துக்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் விசாரணைக் கைதி ஒருவருக்காக ஒதுக்கப்பட்டிருந்த காற்சட்டைக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
கடத்த முயன்ற போதைப்பொருள் 130 மில்லிகிராம் எடையுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான சோதனையில் கண்டுபிடிப்பு
நேற்று முன்தினம் (19) சிறையின் பார்வையாளர் சோதனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வழக்கமான சோதனையின்போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கைப்பற்றப்பட்ட பொருளுடன் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைக்காக பதுளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி