பசறையில் இடம்பெற்ற கோர விபத்து! பாரிய கற்பாறை இரவோடு இரவாக அகற்றப்பட்டது
srilanka
badulla
By Vasanth
15 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பசறை பஸ் விபத்தில் வீதியில் விழுந்திருந்த பாரிய கற்பாறை நேற்று இரவு அகற்றப்பட்டது.
பசறை - 13ஆம் கட்டை பகுதியில் உள்ள குறித்த கற்பாறை வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அகற்றப்பட்டுள்ளது. குறித்த பாறை துண்டுகளாக உடைக்கப்பட்டு அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 20 ஆம் திகதி காலையில், லுனுகலையிலிருந்து கொழும்புக்குச் சென்ற பஸ் ஒன்று பசறை பகுதியில் செங்குத்தாக விழுந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதற்கிடையில், விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பஸ் சாரதி மற்றும் டிப்பர் சாரதி ஆகியோர் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி