விவசாயிகளை சுரண்டும் இடைத்தரகர்கள் : வடக்கில் வரப்போகும் புதிய செயற்பாடு

Jaffna Northern Province of Sri Lanka
By Sumithiran Jan 13, 2025 11:13 AM GMT
Report

 விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான சந்தைவிலை கிடைக்கவேண்டும். அதற்கு ஏற்றவகையில் பொருளாதார மத்திய நிலையங்களை இந்த ஆண்டு மீளத் திறப்பதற்கு திட்டமிட்டு வருகின்றோம் என வடக்கு மாகாண(northern province) ஆளுநர் நா.வேதநாயகன்(vethanayakan) தெரிவித்தார்.

மறவன்புலோ கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் நெல் அறுவடை விழாவும் கமக்காரர் கௌரவிப்பு நிகழ்வும் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை காலை (13.01.2025) இடம்பெற்றது. அங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள காலநிலை

தற்போதைய காலநிலை மாற்றம் விவசாயிகளுக்கு பெரும் சவாலாக மாறியிருக்கின்றது. முன்னைய காலங்களில் நெல் அறுவடையின்போது மழை பெய்வதில்லை. ஆனால் இப்போது மழையின் பாதிப்பை நாம் எதிர்கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சில நாள்களுக்குள் கடும் மழை பெய்தபோதும் தெய்வாதீனமாக மிகப் பெரியளவு நெல் அழிவு ஏற்படவில்லை.

விவசாயிகளை சுரண்டும் இடைத்தரகர்கள் : வடக்கில் வரப்போகும் புதிய செயற்பாடு | Middlemen Exploiting Farmers

அந்த மழை மற்றும் தற்போது பெய்யும் மழை என்பனவற்றால் உங்களின் வயல் நிலங்கள் ஈரலிப்பாக உள்ளன. எனவே இதை விவசாயிகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நெல் அறுவடை முடிந்த பின்னர் சிறுதானியங்களை பயிரிடுங்கள். அதற்கான விதைகளை வழங்குவதற்கு விவசாயத் திணைக்களம், பிரதம செயலர் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் இயற்கையின் சீற்றம் : குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை

இலங்கையில் இயற்கையின் சீற்றம் : குடும்பங்களுக்கு ஏற்பட்ட நிலை

சிறுதானியப் பயிர்ச்செய்கை

வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களும் குளத்தை நம்பி இருபோகத்தை மேற்கொள்கின்றன. யாழ்ப்பாணத்தில் நெற்செய்கை என்பது வான்பார்த்த பயிராகவே உள்ளது. மழையை நம்பி ஒருபோகம் மாத்திரமே செய்கின்றோம். எனவே தற்போதுள்ள காலநிலையின் மாற்றத்தைப் பயன்படுத்தி சிறுதானியப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.

விவசாயிகளை சுரண்டும் இடைத்தரகர்கள் : வடக்கில் வரப்போகும் புதிய செயற்பாடு | Middlemen Exploiting Farmers

எமது மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், எந்தப் பயிரை உற்பத்தி செய்தால் ஏற்றுமதி செய்யலாம் என்பதையும் ஆராய்ந்து அதற்கு ஏற்ப விவசாய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டும். அதற்கு விவசாயத் திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்றையதினம் நெல் அறுவடையுடன் சேர்த்து மூத்த விவசாயிகளை கௌரவித்திருந்தீர்கள். அதற்கு எனது மனமார்த்த பாராட்டுக்கள்.

பாலைவனமாகிறதா யாழ்ப்பாணம்...! நடக்கும் சுண்ணக்கல் அகழ்வு : தவறிழைத்த எம்.பிக்கள்

பாலைவனமாகிறதா யாழ்ப்பாணம்...! நடக்கும் சுண்ணக்கல் அகழ்வு : தவறிழைத்த எம்.பிக்கள்

வெளிநாட்டு மோகத்தில் இளையோர்

இன்று இளையோர் விவசாயத்தில் நாட்டம் குறைந்தவர்களாக மாறிவிட்டார்கள். வெளிநாட்டு மோகத்தில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்கள். அங்கு சென்ற பலர் இப்போது நாட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

விவசாயிகளை சுரண்டும் இடைத்தரகர்கள் : வடக்கில் வரப்போகும் புதிய செயற்பாடு | Middlemen Exploiting Farmers

எங்கள் இளையோர்கள் விவசாயத்தில் இறங்கினால் நாம் உற்பத்தியில் சிறப்பான இடத்தைப்பெற முடியும். வடக்கு மாகாணத்தில் என்ன வளம் இல்லை? இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு மாகாணத்திலுள்ளது போன்று வளங்கள் ஏனைய மாகாணங்களில் இல்லை. ஆனால் அதை உரிய வகையில் நாங்கள் பயன்படுத்தத் தவறியிருக்கின்றோம்.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 50,000 வாகனங்கள்

வடக்கின் முக்கியமான பொருளாதார தூண்கள்

விவசாயமும், கடற்றொழிலும் எமது மாகாணத்தின் முக்கியமான பொருளாதாரத் தூண்கள். அவை இரண்டையும் சார்ந்த தொழிற்சாலைகள் எமது பிரதேசத்தில் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உற்பத்திப்பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாகவும் மாற்றியமைக்க முடியும், என்றார் .

விவசாயிகளை சுரண்டும் இடைத்தரகர்கள் : வடக்கில் வரப்போகும் புதிய செயற்பாடு | Middlemen Exploiting Farmers

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன், கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர் தெய்வநாயகி பிரணவன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கைதடி பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.கபில்ராஜூம் கலந்துகொண்டனர். பாடசாலை மாணவர்கள், ஊரவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது   

யாழ். வடமராட்சி கடலில் கரையொதுங்கிய சிலை! காண குவியும் மக்கள்

யாழ். வடமராட்சி கடலில் கரையொதுங்கிய சிலை! காண குவியும் மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024