காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை
காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை காநிலை தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் எரான் விக்ரமரத்ன மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதற்கு காநிலை தொடர்பான நாடாளுமன்ற குழு ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படும் என விக்ரமரத்ன வலியுறுத்தினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
காலநிலை மாற்றம்
"நாங்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், ஐக்கிய நாடுகள் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்புடன் இணைந்து பணியாற்ற உத்தேசித்துள்ளோம்.
மேலும் பசுமை ஹைட்ரஜனுக்கான அரசாங்கத்தின் வரைபடத்திற்கு ஏற்ப செயற்படுவோம்.
2050 ஆம் ஆண்டளவில் காலநிலை மாற்றம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத இழப்பை ஏற்படுத்தும்.
இலங்கையின் விவசாயத்துறை
காலநிலை மாற்றத்தினால் இலங்கையின் விவசாயத்துறை பில்லியன் கணக்கான டொலர்களை இழக்க நேரிடும். இந்த சூழலை எதிர்கொள்ள அரசாங்கம் மூன்று உத்திகளைக் கடைப்பிடித்துள்ளது.
முதலாவது பூமத்திய ரேகைக்கு அருகில் அமைந்துள்ள நாடுகளால் உருவாக்கப்பட்ட வெப்ப மண்டல பெல்ட் முயற்சி. இரணடாவது காலநிலை நீதிமன்றம் உருவாக்கி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சி போன்ற சுற்றுச்சூழல் நட்பு அபிவிருத்தி திட்டங்களில் கவனம் செலுத்தல். மூன்றாவது சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை அமைத்தல்,” என தெரிவித்துள்ளார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |