கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் கடற்படை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(22) மாலை உருத்திபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு கடற்படை கட்டளை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
இந்த நடவடிக்கையின் போது உருத்திபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டதில் அவரிடமிருந்த நான்கு கேரள கஞ்சா பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கைது செய்யப்பட்ட அவரிடமிருந்த 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா பொதிகள்
மேலும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு இரண்டு மில்லியன் ரூபா என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சியை வசிப்பிடமாக கொண்ட 29 வயதுடையவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்தோடு குற்றஞ்சாட்டப்பட்டவர் கேரள கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |