திருகோணமலை ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டோருக்கு பிணை
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதானோருக்கு 15 க்கும் மேற்பட்டோருக்கு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் பிணை வழங்கி நேற்று(16) மாலை உத்தரவிட்டார்.
திருகோணமலை கந்தளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் இவ்வாறு 15 பேர் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் வீடுகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் காவல்துறையினரால் வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கைதானவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை காவல்துறையினர் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே பிணை வழங்கி உத்தரவிட்டார்.
சந்தேக நபர்களுக்காக வேண்டி கந்தளாய் சட்டத்தரணிகள் சங்கம் பிரசன்னமாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
