ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம்! ரிஷாட்டின் மனைவி மற்றும் மாமனாருக்கும் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
Colombo
Court
Rishad
SriLanka
By Chanakyan
ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தீ காயங்களுக்கு உள்ளாகி மர்மமான முறையில் ஹிஷாலினி ஜுட் குமார் (வயது -16) என்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரிஷாட் பதியூதீனை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீமதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.