பாடசாலை மாணவி வன்புணர்வு : அதிபர் உட்பட மூவருக்கு நீதிமன்றம் அளித்த உத்தரவு
பாடசாலை மாணவி வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு தகவல்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனமல்வில தேசிய பாடசாலை அதிபர் உள்ளிட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு வெல்லவாய மாவட்ட நீதவான் சதுர இ.திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் அதிபர், பிரதி அதிபர், ஆசிரிய ஆலோசகர் மற்றும் ஒழுக்காற்றுக் குழுவுக்குப் பொறுப்பான ஆசிரியர் ஆகியோர் ஆவர்.
நீதவான் விடுத்த எச்சரிக்கை
சாட்சிகள் மீது எவ்விதத்திலும் செல்வாக்கு செலுத்தக் கூடாது எனவும், அவ்வாறான சம்பவம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டால், பிணை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவர் எனவும் பிணை வழங்கிய நீதவான் எச்சரித்துள்ளார்.
சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை
பாடசாலையில் கடமையாற்ற வேண்டும் என்பதற்காக இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சந்தேகநபர்களை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |