வீதி மூடப்பட்டு இராணுவம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்!
கொரோனா தொற்று அச்சம் காரணமாக மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதையடுத்து ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியின் பொகவந்தலாவை பெற்றசோ , ஹட்டன் கொழும்பு வீதியின் கலுகல சந்தியிலிருந்து வீதி மூடப்பட்டு பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் நள்ளிரவு 12 மணிமுதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஹட்டன் பிரதான பஸ்தரிப்பிட காரியாலயம் மூடப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் பஸ்கள் தூரச்சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளூர் சேவைகள் மாத்திரம் இடம்பெறுவதாக பஸ் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றர்.
மேலும் கொரோனா தொற்று விழிப்புணர்வு நடவடிக்கையில் சுகாதர பிரிவிரும் பொலிஸாரும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் முககவசம் அணியாது சுகாதர விதிமுறைகளை பின்பற்றாது பொது இடங்களில் பொதுமக்கள் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.













