மன்னார் பாலியாறு நீர்த்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பு!
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ( Ranil Wickremesinghe) வழிகாட்டலுக்கு அமைவாக மன்னார் (Mannar) - பாலியாறு நீர் வழங்கல் திட்டத்தினை நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வு மல்லாவி-முல்லைத்தீவு ( Mullaitivu) ஊடான நீர் வழங்கல் காரியாலயத்தில் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது.
இத்திட்டமானது, 116 பில்லியன் ரூபா செலவில் வட மாகாண மக்களுக்கு பாதுகாப்பான குடி நீரை வழங்குவதை மையமாக கொண்டு மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நீர் சேகரிப்பு மற்றும் நீர் பயன்பாட்டை வினைத்திறனாக்க கூடிய வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
பாலியாறு நீர் வழங்கல் திட்டம்
இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட் கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் (P.S.M.charles)நாடாளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான கே.காதர் மஸ்தான் (K. Kader Masthan), வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் திலீபன், அமைச்சின் செயலாளர் நபீல், பொது முகாமையாளர் பாரதிதாசன் ஆகியோர் இணைந்து இத்திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
குறித்த நிகழ்வில் நீர்வழங்கல் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |