தேர்தல்களை முன்னிட்டு அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விதித்துள்ள தடை
இலங்கையில் அதிபர் தேர்தல் (Presidential Election- Sri lanka) மற்றும் பொதுத் தேர்தல் (Sri Lankan Parliamentary Election) நடைபெறவுள்ள மாதங்களில் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசியல்வாதிகளை அழைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) அறிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் ஒன்றின் மூலம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் பிரச்சார நடவடிக்கை
அதாவது பிரதேச செயலக மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பெயரில் அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என பெப்ரல் (PAFFREL) அமைப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சுட்டிக்காட்டியிருந்தது.
மேலும், பிரசார நடவடிக்கைகள் ஆளுங்கட்சிக்கு சார்பானதாக அமைந்துவிடும் எனவும் குறித்த அமைப்பு தெரிவித்திருந்தது.
எனவே, தேர்தல்கள் ஆணைக்குழு குறித்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |