ஒக்டோபர் மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை!
By Kathirpriya
பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைக்கும் முகமாக குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இன்று (23) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் இந்த தடை உத்தரவு நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களிற்கே குறித்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த வரிசையில், குடிநீர் ஸ்ட்ரோ (straws),பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முள்ளுக் கரண்டிகள், கரண்டிகள், பிளாஸ்டிக் பூ மாலைகள் போன்ற பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.