செம்மணியில் பிரித்தானிய நிபுணத்துவத்துக்கு தடை : லண்டன் எதிர்வினை ஜெனிவாவில்
பிரித்தானியாவின் (United Kingdom) வெளியுறவுத்துறைக் குழு கூட்டத்தில் வைத்து செம்மணி புதைகுழி அகழ்வை மையப்படுத்தி பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்த கருத்து நிச்சயமாகவே சிறிலங்காவை உசாரடைய வைத்து மீண்டும் ஒரு முறை நிராகரிப்பு பட்டயத்தை தூக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஏனெனில் செம்மணி புதைகுழி அகழ்வில் எடு;க்கப்படும் மனித எச்சங்கள் மீதான சோதனைகளுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்க பிரித்தானியா தயாராக உள்ளதை வைத்து ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த உமாகுமரன் எழுப்பிய வினாவுக்கு அமைச்சர் டேவிட் லாமி வழங்கிய பதில் புலப்படுத்தியுள்ளது.
செம்மணி விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தையும் அவர் பகிரங்கப்படுத்தியிருந்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களில் அனைத்துலக பிரசன்னத்தை ஏற்கனவே சிறிலங்கா நிராகரித்து வருவதால் செம்மணிக்கு பிரித்தானியா நீட்ட முனையும் தொழினுட்ப நிபுணத்துவசேவைக்கான அழைப்பும் நிராகரிக்கபடுவதற்கே சாத்தியங்கள் இருந்தாலும் மறுபுறத்தே இந்த விடயம் ஐ.நா மனித உரிமைபேரவையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறக்கூடிய இலங்கை விடயங்களில் மேலும் தாக்கம் செலுத்துவதற்குரிய புதியவழிகளையும் திறக்கலாம் என எதிர்பார்க்கபடும் நிலையில் இந்த விடயத்தையும்
இந்தியாவின் அகமதாபாத் நகரில் கடந்தமாதம் இடம்பெற்ற ஏயர் இந்தியாவின் விமானவிபத்துக்கு குறித்த விமானத்தின் இயந்திரங்களுக்கு எரிபொருளை வழங்கும் கட்டுப்பாட்டு ஆழிகள் நிறுத்திவைக்கபட்டமையே காரணம் என்பது விமானத்தின் கறுப்புபெட்டியில் பதிவான விமானிகளின் அறையில் நடைபெற்ற உரையாடல்கள் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்ட விடயத்தையும் மையப்படுத்திவருகிறது IBC தமிழின் செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
