தாஜ் சமுத்திராவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி! எச்சரிக்கையை புறக்கணித்த தேசியப் புலனாய்வு
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட அப்துல் லதீப் முகம்மட் ஜமீல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்கியவுடன் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்களுக்கு உடனடியாக எச்சரிக்கப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala )தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கை தொடர்பில் தேசியப் புலனாய்வுப் பிரிவு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று (09.07.2025) நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்ட அப்துல் லதீப் முகம்மட் ஜமீல் கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தங்கியவுடன், ஹோட்டல் மின்அஞ்சல் மூலம் தேசிய புலனாய்வுப் பிரிவான எஸ்.ஐ.எஸ்-ஐ (SISI) இற்கு உடனடியாக எச்சரித்திருந்தது.
இந்த எச்சரிக்கை தொடர்பில் தேசியப் புலனாய்வுப் பிரிவு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், ஜமீல் ஏற்கனவே பாதுகாப்பு கண்காணிப்பு பட்டியலில் இருந்தவராகவும், அது தொடர்பான தகவல்களும் இருந்தன.
அப்துல் ஜமீல், ஈஸ்டர் ஞாயிறு (ஏப்ரல் 21, 2019) தினம் இடம்பெற்ற தாக்குதல்களில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுவெடிப்பு நடத்த வேண்டியவராக இருந்தார்.
ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததால், அவர் இடம் மாற்றி, பின்னர் தெஹிவளாவில் உள்ள டிராபிகல் இன் விடுதியில் குண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்தார்.
ஈஸ்டர் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று இன்று நாடாளுமன்றத்தில் வெளியானது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
