தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு! மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை
சுங்கத் துறையால் தடுத்து வைக்கப்பட்ட ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தொடர்பில் கடந்த 18ஆம் நாளன்று கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எழுத்தாளரின் தரப்புச் சார்பாக சட்டத்தரணி விரஞ்சன ஹேரத் மற்றும் சட்டத்தரணி நடராஜா காண்டீபன் ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.
விரைவில் நீதி
இதேவேளை, எதிர்தரப்புவாதிகளாக முறைப்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு அமைச்சு, கலாசார அமைச்சு மற்றும் சுங்கப்பிரிவு சார்பில் சட்டத்தரணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழ் மக்கள் சார்ந்த நினைவுகளையும் கதைகளையும் எழுதுகின்ற உரிமை தமக்கு உள்ளமையை விசாணையின் போது சுட்டிக்காட்டியதாகவும் இந்த விடயத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் விசாரணையின் முடிவில் தீபச்செல்வன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |