வெள்ளத்தில் மூழ்கிய மலையக பகுதிகள்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
Sri Lanka Upcountry People
Badulla
Flood
Landslide
By Abi
பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை நகரப் பகுதிகள் கடும் மழையினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த மழையினால் பண்டாரவளை தர்மவிஜய மாவத்தை பகுதியில் கால்வாய்கள் அடைப்பு ஏற்பட்டதால் இரண்டு அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன் பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மண்சரிவு அபாயம்
இந்தநிலையில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையால் மலையகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் கால்வாய்களை மறைக்கும் வகையில் குப்பைகள் போட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி